என்னவள் காதலுக்கு கவிதாஞ்சலி

மழைக்காதலன் கவிதைகள்…

மழைத்துளிகளில் உன் நினைவுகளை தழுவி பொழிகிறது என் காதல்…

கவிதைகளை படிக்க →
கீழே படிக்கவும்
✦ ✦ ✦

Collections

கவிதை தொகுப்புகள்

🎵 ஒரு காதல் பாடல் — A Romantic Song

மழையில் காதல்

Mazhaiyil Kaadhal — உங்கள் கவிதைகளிலிருந்து உருவான காதல் பாடல்

🎵

படிக்க →

01 💕

யானும் நீயும்…

சிரித்துக் கொண்டே வீழ்த்தி விட்டாய் என்னை… வீழ்ந்து விட்டேன் நான் — உன் கண்ணகுழியில்!!!

படிக்க →
02 🔍

தேடல்…

கடலினில் தொலைந்த நதியாய் உன்னுள் தொலைந்த என்னை தேடுகிறேன்…

படிக்க →
03 👁️

காதல் விழிகள்…

இருளின் சிறையில் நிலவுபோல் நிலவின் சிறையில் இருள் உன் விழிகள்…

படிக்க →
04 🚂

பயணங்கள். . .

கார்கால பின்னிரவில். . புதிதாய் குளித்த சாலை தன்னில். . அன்பேனும் குடையின் கீழ். .

படிக்க →
05 🌺

பெண்மை. . .

தன் நிழல் கொண்டு உன் நிழல் மறைப்பாள் காதலாய்! உன் விழி கொண்டு உலகம் காண்பாள் மனைவியாய்!!!

படிக்க →
06 💌

அன்பே உனக்காக. . .

ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்தேன். . அன்பே.. உனக்காக காத்திருக்கும் இந்த ஒரு நொடிக்காக. . .

படிக்க →
07 🕯️

கருவறை – காதல் – கல்லறை

காதலே. . உன் கருவறையில் உயிர் தரிக்க கல்லறையைக்கூட காணத்துணிகிறேன். . .

படிக்க →
08 🌙

காதல் இரவுகள். . .

துளித்துளியாய் உன் நினைவைத் தழுவி பொழிகிறது கார்மழை.. என்னவளே…

படிக்க →
09 🌸

மலர் இதழ்கள்…

நொடிக்கொருமுறை அழகாய் பூக்கின்றன உன் மதுமலர் இதழ்கள்…

படிக்க →
10 🌹

நினைவுகள்…

ரோஜா இதழ்களைக் கூட பறிக்காத நீ எப்படி பறித்தாய் என் இதயத்தினை…

படிக்க →
11 🌧️

மழையும் காதலும்…

உன்னை அடைய உருகிய கார்முகில்கள் மாய்த்துக்கொண்டன இந்த மண்ணில்… மழைத்துளிகளாய்…

படிக்க →
✦ ✦ ✦

மழையும் காதலும்

கார்காலம்… நிசப்தமான பின்னிரவு…

எங்கும் அடைமழையின் பாதச்சுவடுகள்…

மழைத்துளிகளின் இன்னிசை கானம்…

இவை அனைத்திலும் மனம் செலுத்தாமல்…

என்னவளுக்காக ஏங்கும் நான்…

✦ ✦ ✦

என் காதல் மனைவியே…

வருடங்கள் பல காத்திருந்து… மாதங்கள் பல நேசித்து… வாரங்கள் பல அளவளாவி…

நொடிகளில் மூன்று முடிச்சிட்டு… யுகங்கள் பல ஒன்றாய் வாழ… கரம் பிடித்தேன் உனை நான்…

காலையில் பூத்த மலராக நீ.. உன் மீது உறைந்திருக்கும் பனித்துளியாக நான்…