← முகப்பு திரும்ப
நிலவில் இரு கயல் மோத கண்டேன்..
உன் விழிகளாய்…
· · ·
பகலவன் கண்ட பனித்துளிபோல்
தகிக்கிறது உன் விழி கண்ட என் இதயம்…
· · ·
இருளின் சிறையில் நிலவுபோல்
நிலவின் சிறையில் இருள் உன் விழிகள்…
· · ·
தொலைதூர நிலவும் கவர்ந்து செல்லும் என்பதனாலே
உன்னை சிறைவைத்தேன்
(என்)விழிகளாய் இமைகளுக்குள்…
· · ·
அதிகாலை மழைச்சாரலின் குளிரிலும்
தகிக்கிறதென் இதயம்…
உன் கயல்விழி பார்வையினால்…
· · ·