🌹 Collection

நினைவுகள்…

மழைக்காதலன் கவிதைகள்

← முகப்பு திரும்ப
நதியெனும் உன் வாழ்வில், கரையென நான்… என் பிரிவின் வலிதனில், அன்பெனும் அரவணைப்பு நான்.. தனிமை இரவினில், தலையணை நான்.. உன் கனவின் காதல் கணவன் நான்… உன்னில் புதைந்துள்ள என் நினைவுகள் நான்..
· · ·
தனிமை பற்றி கவிதை புனைய துவங்கினேன் அன்பே.. உன் நினைவுகளை என் மனதில் சுமந்துகொண்டு!!!
· · ·
இரயில் தடங்களோடு பயணிக்கும் ரயில் போல்… என்றும்… உன் நினைவுகளுடன் பயணிக்கிறது… என் வாழ்க்கை!!!
· · ·
உன் நினைவுகளில் மூழ்கியதால் துடிப்பதை நிறுத்திக்கொண்டது என் இதயம்!!!
· · ·
ரோஜா இதழ்களைக் கூட பறிக்காத நீ எப்படி பறித்தாய் என் இதயத்தினை… உன் நினைவுகளால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்!!!
· · ·
ஆயிரமாயிரம் அலைகள் மோதினாலும் கறையாத (கடற்)கரையாய் இருந்துவிடவே நினைத்து தோற்றேன்!!! உன் ஒரு நினைவலை மொதியவுடன்!!! (உன் நினைவுகளில் முழுவதுமாய் கரைந்து விடுகிறேன்!!!)
· · ·
செந்நிற கடலினில் உறங்கும் மாலைநேர கதிரவன் போல் என் நினைவுகளில் என்றும் உறங்குகிறாய். . . என் ஆருயிரே. . .
· · ·
இலக்கணம் இல்லா இலக்கியமானது (என்னவள் இல்லா) என் வாழ்க்கை!!!
· · ·
← மலர் இதழ்கள்மழையும் காதலும் →