🌧️ Collection

மழையும் காதலும்…

மழைக்காதலன் கவிதைகள்

← முகப்பு திரும்ப
கார்காலம்… நிசப்தமான பின்னிரவு… எங்கும் அடைமழையின் பாதச்சுவடுகள்… மழைத்துளிகளின் இன்னிசை கானம்… புதிதாய் குளித்த சாலையோர மரங்களின் பசுமை… முகவரி தேடி சீரிப்பாயும் சாலையோர நீரோடை… இவைதானோ அழகு என்று வியக்கும் வெண்ணிலா… இவை அனைத்திலும் மனம் செலுத்தாமல்… என்னவளுக்காக ஏங்கும் நான்…
· · ·
உன்னை அடைய உருகிய கார்முகில்கள் மாய்த்துக்கொண்டன இந்த மண்ணில்… மழைத்துளிகளாய்…
· · ·
உன்னைப்போல் முகிலொன்று தோன்றவில்லை விண்ணில்… அளவற்ற அன்புமழை பொழிந்தும் உருகவில்லை நீ… அன்பே… உருகி கலந்துவிட்டேன் உன்னில் நான்…
· · ·
ஒருதுளி மழையினால் பூக்கும் பூக்களைப்போல் என் இதயமும் பூக்கிறது உன் ஒருதுளி அன்பினால்…
· · ·
(என்) காதல் தாகம் தணிந்தது , (உன் ) அன்பேனும் மழைச்சாரலில் ..
· · ·
பகலவன் கண்டு உருகிய காரமேகங்கள் கொண்ட கூடலின் மழழை மழை !
· · ·
← நினைவுகள்